The Naked Truth

உண்மைக்கு எப்போதையும் விட இப்போது, அதுவும் இங்கு, மதிப்பு அதிகம். ஏன்?
நீ எனக்கு லைக் போட்டா நான் உனக்கு போடுவேன். இப்படித்தான் கமெண்ட்.. ஷேர்… எல்லாமே…
எதாவது சுடச்சுடப் பேசறாங்களா.. நாமளும் அதையே பேசுவோம்… அப்போதான் லைக்கு விழும்…

கொஞ்சம் யோசிப்போமே… ஊஹூம்.. அதுக்கெல்லாம் நேரம் ஏது?
மக்கள் முட்டாள்கள் – துக்ளக்…
இதுக்கு ஏகப்பட்ட அப்ளாஸ்… தன்னை முட்டாள்கள் என்று ஒப்புக்கொள்வதில் சந்தோஷம்.
தமிழர்கள்.. அல்லது இந்தியர்கள்.. புத்திசாலிகள் என்று சொன்னால் அதற்குக் கை தட்டுவதும் இதே ஜனங்கள்தான்…
இவர்கள் முட்டாளா? புத்திசாலியா?
ஒரு விஷயம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை சொந்தமாக முடிவு செய்வதில்லை… ஃபேஸ்புக் ட்விட்டரில் என்ன ட்ரெண்டோ அதையொட்டியே நம் முடிவு…
செம்மறியாடுகளா நாம்?
ஒரு நண்பர் சிறுகதை ஒன்று எழுதினார்.. மர்மக் கதை… அதில் இருந்த பெரிய ஓட்டையைச் சுட்டிக் காண்பித்தேன். அத்தோடு என்னை அன்ஃப்ரெண்ட் பண்ணிவிட்டார்.
அந்தக் கதைக்கு ஆஹா ஓஹோவென்று கமெண்ட்டுகள். எல்லாம் பெரிய அறிவாளிகள். ஏன்?
காரணம் யாரும் உண்மையைச் சொல்லத் தயங்குகின்றனர். ஏன்?
ட்ரெண்டுக்கு மாறாகப் போனால் லைக்கு விழாது…
ஆற்றோடு போகிறவன் சாதிப்பதில்லை.. எதிர்நீச்சல் போடுகிறவனே சாதிக்கிறான்.
உண்மை மிகவும் அரிதாகிவிட்டபடியால் மதிப்பு ஏறி விட்டது.
பொய் கூறி உண்மையை மறைத்து லைக் வாங்குவதைவிட உண்மையைக்கூறி தனியாக நிற்பேன்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவியைப் பற்றி ஏகப்பட்ட பதிவு. உதவி செய்தவர்களைப் பாராட்டி..
நான் மட்டும் அந்தப் பெண்ணின் அறியாமையைப் பற்றியும் கல்வியைப் பற்றியும் பேசினேன். ஏகப்பட்ட பேர் எனக்கு அர்ச்சனை செய்தனர். ஆனால் அடுத்து என்ன நடந்தது?
எனக்கு அந்த சீட் வேண்டாம் என்று போய்விட்டார் அந்தப்பெண். உதவி செய்தவர்கள் ஏமாளிகள்.
விமரிசனங்களும் அப்படித்தான் ஆகி விட்டன. யார் என்பதைச் சொல் – அப்புறம் விமரிசனம் எழுதுகிறேன். இதுதான் இன்றைய நிலை…
மஹாராஜா அம்மணமாக இருக்கிறார் என்று ஒரு சிறுவன் சொல்லும் வரையில் அம்மண ஊர்வலம்தான்… அதைவிடக் கஷ்டம் என்னவென்றால் மஹாராஜாவின் மாயத் துணியிலேயே எல்லோரும் ஆடை தைத்துக் கொள்வதால் ஊரே அம்மணமாக அலைகிறது.
மக்களை சிந்திக்க வைக்க யாரும் தயாராக இல்லை. சிந்திக்க விட்டால் அரசியல்வாதி முதல் ஊடகங்கள் வரை யாரும் பிழைக்க முடியாது…
அறிவியலில் முன்னேற்றம். ஆனால் அறிவிலே பின்னேற்றம்.
வெகுஜனங்கள் முட்டாளாக இருக்கும் வரைதான் சிலஜனங்களின் பிழைப்பு நடக்கும்.
சிலருக்காக பலர் பலி…
இதுதான் சமுதாய முன்னேற்றம்.
ஆனாலும் பயமில்லாச் சிறுவர்கள் இருக்கிறார்கள். பயந்த கோழை மனிதர்களின் ஆரவாரத்தில் சிறுவர்களின் குரல் இன்று கேட்காமலிருக்கலாம். பயந்த மனிதர்களுக்கும் தெரியும் மஹாராஜாவுக்கு ஆடையில்லை என்று. அவர்கள் சொல்லாததால் ராஜாவின் மானம் போகாதிருக்குமா?
கோழைகளை இந்த உலகம் ஞாபகம் வைத்திருப்பதில்லை. சிறுவன் மட்டுமே நினைவில் இருக்கிறான்.
உண்மையை நாடுபவர் இங்கே வரலாம்.
என் கருத்தை உரக்கச் சொல்ல எனக்கு அச்சமில்லை… நான் லைக்குகளால் உயிர் வாழவில்லை… உண்மைகளால் வாழ்கிறேன்.





    Aadhar (for identity verification):

    Experience:
    Script PDF: